எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் நாகபூசணி அறிவக முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நாகபூசணி அறிவக முன்பள்ளி வளாகத்தில் இல்லத்தின் சிரேஸ்ர உபதலைவர் திரு அ. கனகரத்தினம் அவர்களின் தலமையில் ஆரம்பமாகியது.இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திரு. பாலன் கணேசமூர்த்தி ( ஓய்வு பெற்ற அதிபர் கிளி/இந்து ஆரம்ப வித்தியாலயம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி கலைச்செல்வி ஞானசேகர் (ஆசிரிய ஆலோசகர் வலயக்கல்வி அலுவலகம் ) அவர்களும் விருந்தினர்களாக […]

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் 07.09.2024

முகாமைக்குழுக்கூட்டம் 07.09.2024எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 07.09.2024 காலை 10 .30 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியதுகுறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில

Read More »

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தால் சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறார்களுக்கான “பிள்ளைகளே எமது உலகம்” எனும் தொனி பொருளில் கலை , மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் விளையாட்டு நிகழ்வுகளின் இறுதிக்கட்ட நிகழ்வானது 01 .09.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது . இந் நிகழ்வில் எமது இல்லப்பிள்ளைகள் சிறப்பாக செயல்ப்பட்டதுடன் அதி கூடிய பரிசில்களும் பெற்றுக்கொண்டனர்

Read More »

பிறந்தநாள் நிகழ்வு 30.06.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் பிள்ளைகளின் வைகாசி,ஆனி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வானது 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை இல்லத்தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 4.00 மணியளவில் எமது இல்ல வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது . இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.சுப்பிரமணியம் முரளிதரன் (மாவட்ட அரசாங்க அதிபர் கிளிநொச்சி) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு அந்தோனிப்பிள்ளை அன்ரன் டயஸ் (அதிபர் . கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயம்) […]

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் 21.06.2024எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 21.06.2024 காலை 10 .30 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியதுகுறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில

Read More »

இன்றைய தினம் (21.06.2024)எமது இல்ல பிள்ளைகளுக்கான செஸ் விளையாட்டு பயிற்சி வகுப்பானது எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் பதிவுகள் சில

Read More »

யாழ் இந்திய துணைத்தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச யோகா தினமானது எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 17.06.2024 இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து பிள்ளைகளுக்கு முறையான யோகா பயிற்சி நெறியினை கற்பித்து யோகா கலையின் மகத்துவத்தினை பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்தபட்டது. இந் நிகழ்வில் யாழ், இந்திய துணைத்தூதுவர் மாண்புமிகு சாய் முரளி அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரி திரு. நாகராஜன் மற்றும் தூதரகத்தின் கலாச்சார அதிகாரி திரு. பிரபாகரன் […]

Read More »

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 2023 க்கான 16’17 வயதிற்கான கராத்தே போட்டியானது கொழும்பு பொது நூலகத்தில் 10.06.2024இன்று இடம்பெற்றது. இப் போட்டி யில் பங்கு கொண்டு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லமாணவர்கள் “01தங்கம்;02வெள்ளி;03வெண்கலம்”உட்பட06பதக்கங்கள் பெற்று இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.”ந.சாளினி”முதலாம் இடத்தினையும் ;”வ.தமிழ்ப்பிரியன்”;”ந.கயல்விழி”இரண்டாம் இடத்தினை யும் ;தே.பிரகாசினி;நா.தர்சினி;”ர.மயூரா”ஆகிய யோர் மூன்றாம் இடத்தினை யும் பெற்றுள்ளனர்

Read More »

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லப்பிள்ளைகளின் 2023(2024) க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்….

Read More »