முகாமைக்குழுக்கூட்டம் (MAY-2022)

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (MAY-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (22.05.2022) மாலை 2:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றதுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் இல்லத்தினை சிறப்புற நடாத்திச்செல்வதற்கான முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு மாலை -4.30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது. நிகழ்வின் பதிவுகள் […]

Read More »

பிறந்தநாள் விழா-April

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் அமரர் உயர் திரு. தி.இராசநாயகம் ஐயா அவர்களின் ஜெனன தினத்தையிட்டு  அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் 2022 சித்திரை மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 01.05.2022 அன்று எமது இல்லத்தலைவர் திரு. ச. மோகனபவன்  அவர்களின் தலமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.     இந்நிகழ்வில் விருந்தினர்களாக  திரு. பொன்னம்பலம்  விஜயநாதன் அவர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர் முன்பிள்ளைப்பருவ […]

Read More »

வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி- 2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 01.30 மணியளவில் எமது இல்லத்தின் விளையாட்டு மைதானத்தில் எமது இல்ல தலைவர் திரு. ச.மோகனபவன்  அவர்களின் தலமையில் ஆரம்பமாகியது.                                                            […]

Read More »

விளையாட்டு விழா- 2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் திருவள்ளுவர் முன்பள்ளி மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கான விளையாட்டு விழா 09.04.2022 அன்று பி.ப. 2.30 மணியளவில் மகாதேவா சுவாமிகள் ஆண்கள் சிறுவர் இல்ல விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் இல்ல தலைவர் திரு. சிவஞானசுந்தரம் அவர்களின் தலமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு. ச. மோகனபவன் தலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு. தங்கவேல் கண்ணபிரான் அதிபர் கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அவர்களும் முகாமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக […]

Read More »

கணினிப் பயிற்சி நிலையத் திறப்பு விழாவும் ‘புதிய சரிதம்’ சஞ்சிகை வெளியீடும்-2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குழந்தைகளுக்கான கணினிப் பயிற்சி நிலையமானது பிரமாண்டமான முறையில் 30.03.2022 அன்று பி.ப.2.30 மணியளவில் இல்ல தலைவர் ச.மோகனபவன் அவர்களின் தலமையில் திரு.எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளர் வடமாகாணம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் சிரேஸ்ர மகளிர் இல்லத்தினரால் ‘புதிய சரிதம்’ சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு.இராஜேந்திரம் குருபரன் ஆணையாளர் நன்னடத்தை பாதுகாவல் மற்றும்  சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாணம் அவர்களும் மதகுருமார்கள் மற்றும் முகாமைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், […]

Read More »

இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் விளையாட்டுக்களின் வரிசையில் ஆண் குழந்தைகளுக்கான காற்பந்தாட்ட போட்டி 31/03/2022 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் சேரன். சோழன் ஆகிய இரு இல்லங்களும் போட்டியிட்டு சேரன் இல்லம் வெற்றி பெற்றது. அதன் பதிவுகள் சில…..

Read More »

பிறந்தநாள் விழா -MARCH-2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022 பங்குனி மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 27.02.2022 அன்று இல்ல தலைவர் திரு. ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. இ.அரியரட்ணம் அவர்கள் பிரசித்தி நொத்தாரிசு வடமாகாண யாழ்மேல் நீதி மன்ற வலயம் அகில இலங்கை சமாதான நீதவான் தலைவர் பூனகரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், திரு. சி.பத்மசிறி அவர்கள் பொருளாளர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் […]

Read More »

இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் விளையாட்டுக்களின் வரிசையில்  தொடக்க நிகழ்வாக பெண் குழந்தைகளுக்கான வலைப்பந்தாட்டப் போட்டி 24/03/2022 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் சேரன். சோழன் ஆகிய இரு இல்லங்களும் போட்டியிட்டு சோழன் இல்லம் வெற்றி பெற்றது. அதன் பதிவுகள் சில…..           

Read More »

பிறந்தநாள் விழா

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022 மாசி மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 27.02.2022 அன்று இல்ல தலைவர் திரு. ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு.கடம்பசீலன் அவர்கள் பொறியியலாளர் -யாழ் பல்கலைக்கழகம் மற்றும் உரிமையாளர் நண்பர்கள் விருந்தகம், திருமதி. பரமேஸ்வரன் உதையா தலைமை சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர் – கிளிநோச்சி அவர்களும் திரு. கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் […]

Read More »