பிறந்தநாள் விழா- January & February- 2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தை ,மாசி மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 26.02. 2023 அன்று எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு.சந்திரசேகரம் ரவீந்திரதாஸ் (றோயன்) நலன் விரும்பி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு க.வைரமுத்து உப தலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு அ.கனகரத்தினம் சிரேஷ்ட உபதலைவர் மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் எமது இல்லத்தின் செயலாளர் திரு.கு.பகீரதன் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் எமது இல்ல பணியாளர்கள் இல்ல குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு இந் நிகழ்வினை சிறப்பித்தனர்.

பிறந்தநாள் குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன மற்றும் கலைநிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பாடசாலை மட்ட தேசிய ரீதியில் கராத்தே போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கம் 3 வெண்கலப் பதக்கங்களை பெற்ற எமது இல்ல மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்துடன் தைப்பொங்கல் நிகழ்வையிட்டு எமது இல்ல குழந்தைகளிடையே நடாத்தப்பட்ட மாலை கட்டுதல், கோலம் போடுதல், நிறைகுடம் வைத்தல் போன்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

இதன் பதிவுகள் சில