சிறுவர்தின விழா -2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் சிறுவர் தினவிழா 01.10.2022 அன்று பி.ப 03 மணிக்கு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இல்ல தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. கௌரவ வைத்தியநாதன் தவநாதன் அவர்கள் முன்னாள் மகாணசபை உறுப்பினர் வடக்கு மாகாணம் அவர்களும் திரு.SP அமலராசா அவர்கள் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலகம் கரைச்சி அவர்களும் திரு.இ. ராஜன் சிறுவர் நன்னடத்தை தலமை காரியாலய சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் அவர்களும் எமது இல்லத்தின் சிரேஸ்ட உபதலைவர் திரு. சு.கனகரத்தினம் அவர்களும் இல்லத்தின் செயலாளர் திரு.கு. பகீரதன் அவர்களும் முகாமைக்குழு உறுப்பினர் திருமதி கிருபா ஜெயக்குமார் அவர்களும் கலந்து கொண்டதுடன் எமது இல்லத்தின் ஆசிரியர்கள் ,முகாமையாளர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்ததுடன் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விருந்தினர்களால் மலர் செண்டு கொடுத்து மகிழ்வித்து பணியாளர்களால் வரவேற்று அழைத்துவரப்பட்டதுடன் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் பணியாளர்களின் கலை நிகழ்வுகளும் குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்குடன் நிகழ்த்தப்பட்டன.