Categories
News

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் நாகபூசணி அறிவக முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நாகபூசணி அறிவக முன்பள்ளி வளாகத்தில் இல்லத்தின் சிரேஸ்ர உபதலைவர் திரு அ. கனகரத்தினம் அவர்களின் தலமையில் ஆரம்பமாகியது.
இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திரு. பாலன் கணேசமூர்த்தி ( ஓய்வு பெற்ற அதிபர் கிளி/இந்து ஆரம்ப வித்தியாலயம்) அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி கலைச்செல்வி ஞானசேகர் (ஆசிரிய ஆலோசகர் வலயக்கல்வி அலுவலகம் ) அவர்களும் விருந்தினர்களாக சுவேந்திர சிம்மியா சுவாமிகள் (சிம்மியா மிசன் கிளிநொச்சி). ,திருமதி துவாரகா குபேந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் உருத்திரபுரம்), திருமதி நடராசா டெஸ்ஸியா சமுர்த்தி உத்தியோகத்தர், திருமதி சுசீலா ரவீந்திரன் குடும்ப நல உத்தியோகத்தர் ஜெயந்திநகர் அவர்கள் மற்றும் எமது சிறுவர் இல்ல பணியாளர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் குழந்தைகளின் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற்றன அதன் பதிவுகள் சில