மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்- பொதுக் கூட்டம் -2017.09.10

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்

பொதுக் கூட்டம் -2017.09.10

மேற்படி சிறுவர் இல்லத்தின் பொதுக் கூட்டம் இன்று (10.09.2017) காலை 9:00 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய இக் கூட்டத்தில் முதலில் தவத்திரு கணேசானந்த மகாதேவா சுவாமிகள் சமாதி எய்தியமை நினைவு கூரப்பட்டு மௌன அஞ்சலி பிரார்த்தனையும் இடம் பெற்றது.

குறித்த பொதுக் கூட்டத்தில்  உயர் அதிகாரிகளும் ஓய்வு நிலை அதிகாரிகளும் சமூகத் தொண்டர்களுமாக பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

இதில் புதிய உறுப்பினர்கள் சிலர் உள்வாங்கப்பட்டதோடு முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றங்களை மேலும் முன்னகர்த்தி செல்லக் கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து அமுலாக்குவதாக உறுதி செய்து கொண்டனர். இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.