Categories News Post author By webadmin Post date September 9, 2017 ← யாழ் விருது பெற்ற முன்னாள் அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தந்தையும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் வடமாகாண பொது நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளருமான உயர்திரு. தி. இராசநாயகம் அவர்கள் யாழ் விருது பெற்றமையை கௌரவிக்கும் வகையில் பணிநயப்பும் “இமயம்” பாராட்டு மலர் வெளியீடும் 19.08.2017 (சனிக்கிழமை) இல்ல வளாகத்தில் முன்னை நாள் கரைச்சி பிரதேச செயலரும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் விசேட ஆணையாளருமான திரு. பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமயில் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் அனைவரும் விழாநாயகனை மலர் மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் நிகழ்வுகளின் சில பதிவுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு மாவை. சேனாதிராஜா அவர்கள், மாண்புமிகு சி. சிறிதரன் அவர்கள், வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு அனந்தி சசிதரன் அவர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் மாண்புமிகு. வை. தவநாதன் அவர்கள், மாண்புமிகு இ. ஜெயசேகரன் அவர்கள், மாண்புமிகு ப. அரியரத்தினம் அவர்கள், வட மாகாண முன்னை நாள் பிரதம செயலாளரும் ஆளுனர் செயலாளரும் ஆலோசகருமான திரு. சி இரங்கராசா அவர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உயர்திரு. சி. சத்தியசீலன் அவர்கள், வட மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திரு. தி. விஸ்வரூபன் அவர்கள், காணி உரித்து நிர்வாகத் திணைக்கள உதவி ஆணையாளர் திரு. சி. பத்மசிறி அவர்கள், கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. ஆர் .சி. அமல்ராஜ் அவர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச. மோகனபவன் அவர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. அ. கேதீஸ்வரன் அவர்கள், கிளிநொச்சி மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. குயின்டஸ் அவர்கள், கரைச்சி பிரதேச செயலர் திரு. கோ. நாகேஸ்வரன் அவர்கள், மூத்த எழுத்தாளர் திரு. நா. யோகேந்திரநாதன் அவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. → மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்- பொதுக் கூட்டம் -2017.09.10