43வது தேசிய ரீதியிலான கராத்தே சுற்றுப் போட்டியில் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லக் குழந்தைகள் சாதனை

இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் 13.10.2018, 14.10.2018 ஆகிய இரு தினங்கள் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட 43வது தேசிய ரீதியிலான கராத்தே சுற்றுப் போட்டியில் எமது இல்லக் குழந்தைகள் பங்கேற்றமையை பாராட்டுவதோடு இதில் செல்வன் ஜெ.கிருபாகரன் (13வயது) மற்றும் செல்வன் சு. பிறேமிலன் (13வயது) ஆகிய இருவர் குமித்தே போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்று வெற்றியீட்டி கிளிநொச்சி மாவட்டத்திற்கும் எமது இல்லத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளமையை இல்லக் குழந்தைகள், இல்ல நிர்வாகத்தினர் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம். இவர்களது வெற்றிக்கும் அயராத முயற்சிக்கும் என்றும் தலைசாய்க்கின்றோம். வெற்றியீட்டிய இல்லக் குழந்தைகளுடன் இல்லத் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் அவர்களையும் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. வெ. வேலாயுதம் அவர்களையும் அவர்களையும் படங்களில் காணலாம்.

 

இவர்களது வெற்றிக்கு உறுதுணையாயிருந்து பயிற்சி வழங்கிய கராத்தே ஆசிரியர் திரு. சென்சேய் சி. விஜயராஜ் அவர்களையும் பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம்.