எமது இல்லத்தின் ஸ்தாபகர் அமரர் உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் ஜெனன தினத்தையிட்டு 01.05.2024 அன்று எமது ஜெயந்திநகர் இல்ல வளாகம் மற்றும் புதுமுறிப்பு இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள இராசநாயகம் ஐயா அவர்களின் திருவுருவச் சிலைக்கு தலைவர், முகாமைக்குழு உறுப்பினர்கள் , பணியாளர்கள் , குழந்தைகள், பழைய மாணவர்கள் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் இராசநாயகம் ஐயா அவர்களின் தன்னலமற்ற சேவைகள் நற்பணிகள் தொடர்பாகவும் பேருரைகள் நிகழ்த்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து எமது இல்லத்தின் பழைய மாணவர்களான மகாதேவா விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் புது முறிப்பு சிறுவர் இல்ல வளாகத்தில் இராசநாயகம் ஐயா அவர்களின் ஞாபகார்த்த மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட குருதிக்கொடை முகாமில் பழைய மாணவர்கள், பணியாளர்கள், நலன்விரும்பிகள் என 60ற்கு. மேற்பட்டோர் குருதி தானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.. இக் குருதிகள் யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் தலைமையிலான குழுவினரால் பெறப்பட்டது. அதன் பதிவுகள் சில