பிறந்தநாள் விழா- July & August- 2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் July & August மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 03.09. 2023 அன்று எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 4 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. யூட்வோல்ரன் அவர்கள் திட்டப்பணிப்பாளர் CDLG , ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் UNDP அவர்களும் திரு அ.கனகரத்தினம் சிரேஷ்ட உபதலைவர் மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் திருமதி கிருபா ஜெயக்குமார் முகாமைக்குழு உறுப்பினர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் எமது இல்ல பணியாளர்கள் இல்ல குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு இந் நிகழ்வினை சிறப்பித்தனர்.

நிகழ்வின் குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

இதன் பதிவுகள் சில