எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் நலன் விரும்பி திருமதி துரைசிங்கம் நல்லம்மா குடும்பத்தினரின் நிதி அனுசரணையின் மூலம் அமரர் துரைசிங்கம் அவர்களின் நினைவாக 2024 தை திருநாள் பொங்கல் பொங்கி மகிழ்வடைய வேண்டும் எனும் நோக்கோடு கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயந்திநகர் ,ஊற்றுப்புலம், முறிப்பு, திருநகர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மிக வறுமைக்கு உட்பட்ட குடும்பங்களை கிராம அலுவலர் ஊடாக தெரிவு செய்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூபா 7000/- பெறுமதியான பொங்கல் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் அடங்கிய பொதிகள் இல்லத்தலைவர் திரு .ச . மோகனபவன் அவர்களால் 14.01.2024 அன்று வழங்கி மகிழ்விக்கபட்டது