கல்விக் குழுக்கூட்டம்- 30.12.2018

கல்விக் குழுக்கூட்டம்- 30.12.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (மார்கழி-2018) கல்விக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (30.12.2018) காலை 9:00  மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் எமது இல்ல கல்விக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளர் திரு. க. முருகவேல் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் இவ்வருட கல்வி வளர்ச்சி பற்றியும் கல்வி அபிவிருத்திக்கான எதிர்கால செயற்றிட்டங்கள் சம்பந்தமான விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.