கிளிநொச்சி கால்நடை உற்பத்தி சுகாதார வைத்திய அதிகாரி கலாநிதி சுப்பிரமணியம் கஜரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டில் 21.12.2018 அன்று தென்னிலங்கையைச் சேர்ந்த கால்நடை வைத்தியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் எமது இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் எமது இல்லத்தின் பல இடங்களையும் பார்வையிட்டிருந்ததுடன் கறவைப்பசு பண்ணையினைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றிருந்தனர். இதன் போது எடுக்கப்பட்ட படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.