ஒளி விழா-2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஒளிவிழாவானது 18.12.2022 அன்று இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்பணி டனிஸ்ரன் அடிகளார் OBTEC நிறுவனத்தின் இயக்குநர்  திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திருமதி பிறேமதாஸ் நகுலாதேவி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயந்திநகர் அவர்களும் எமது இல்லத்தின் செயலாளர் திரு கு.பகீரதன் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மற்றும் எம் இல்ல பணிப்பாளர்கள் பணியாளர்கள் இல்லக் குழந்தைகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அத்துடன் குழந்தைகளின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.