இல்லத்தின் ஸ்தாபகர் அமரர் உயர் திரு. தி. இராசநாயகம் ஐயா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வையிட்டு அன்னாரது எண்ணுருவால் எமது குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு திட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான எமது இல்ல கிராஞ்சி தென்னம் தோப்பிற்கு 01.05.2023 அன்று இராசநாயகம் தென்னம் தோப்பு என பெயர் சூட்டப்பட்டு அமரர் உயர் திரு. இராசநாயகம் ஐயா அவர்களின் பாரியாரினாலும் எமது இல்ல தலைவர் திரு.ச மோகனபவன் அவர்களினாலும் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது. இந் நிகழ்வில் எமது இல்ல சிரேஸ்ட உபதலைவர் திரு. அ.கனகரத்தினம் அவர்களும் சிரேஸ்ட உபதலைவர் திரு.மூ.நவரத்தினம் அவர்களும் செயலாளர் திரு கு.பகீரதன் அவர்களும் உபதலைவர் திரு.சி.யசோதரன் அவர்களும் உபசெயலாளர் திரு.கி.விக்னராஜா அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்களும் பிரசித்திநொத்தரிசு மற்றும் பூநகரி ப.நோ.கூ சங்க தலைவர் திரு.தா.அரியரத்தினம் அவர்களும் எமது இல்ல அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் பழைய மாணவர்கள் , இல்லக்குழந்தைகள் அனைவரும் கலந்து சிறப்பித்ததுடன் ஸ்தாபகர் உயர் திரு. தி. இராசநாயகம் ஐயா அவர்களின் தன்னலமற்ற சேவைகள் நற்பணிகள் தொடர்பாகவும் விருந்தினர்களால் பேருரைகள் நிகழ்த்தப்பட்டன.

தொடர்ந்து எமது இல்ல அலுவலக வளாகம் மற்றும் புதுமுறிப்பு இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தாபகர் உயர் திரு. தி. இராசநாயகம் ஐயா அவர்களின் திருவுருவச்சிலைகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது.

நிகழ்வின் பதிவுகள் சில…..