2018 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மற்றும் 2019 தை மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் விழா

 

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மற்றும் 2019 தை மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் விழா 15.02.2019 வெள்ளிக்கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக்குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. சின்னையா வதனகுமார் (பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, கிளிநொச்சி) அவர்களும் மற்றும் எமது இல்ல கௌரவ முகாமைக்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.