வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2024.

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2024.

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 30.03.2024 சனிக்கிழமை பி.ப 2 மணியளவில் இல்லத்தின் விளையாட்டு மைதானத்தில் இல்லத்தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திரு த. தவச்செல்வம் முகுந்தன் பிரதேச செயலாளர் கரைச்சி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.உபுல செனவிரெத்தின (சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்சர், சிரேஸ்ர பொலிஸ் பிரிவு கிளிநொச்சி மாவட்டம்) அவர்களும் மேஜர் யூ.டி.எஸ்.ஆர்.உசெட்டி (இலங்கை இலகு காலாட்படை கட்டளை அதிகாரி 7இ.இ.கா. படை முகாம் கனகபுரம் கிளிநொச்சி )அவர்களும் திரு சுந்தரலிங்கம் சுகுனன் பிரபல வர்த்தகரும் உரிமையாளரும் தமிழ்மணி வாணிபம் கிளிநொச்சி மற்றும் இல்ல முகாமைக்குழு உறுப்பினர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் எமது சிறுவர் இல்ல பணியாளர்கள் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்துடன் குழந்தைகளின் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற்றன அதன் பதிவுகள் சில