வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி- 2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 01.30 மணியளவில் எமது இல்லத்தின் விளையாட்டு மைதானத்தில் எமது இல்ல தலைவர் திரு. ச.மோகனபவன்  அவர்களின் தலமையில் ஆரம்பமாகியது.                                                                                     இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு. இராஜரட்ணம் வரதீஸ்வரன் செயலாளர் கல்வி அமைச்சு – வடமாகாணம் அவர்களும் திரு. சோமசுந்தரம் இரவிச்சந்திரன் பிராந்திய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் அவர்களும்                   திருமதி சாந்தினி சக்திவேல் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் சிரேஸ்ட ஆலோசகர்- கனடா  அவர்களும்  மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் எமது இல்ல பழைய மாணவர்கள் , பணியாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் குழந்தைகளின் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற்றன.

நிகழ்வின் பதிவுகள் சில