முகாமைக் குழுக்கூட்டம்- 22.01.2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (January-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (22.01.2022) மாலை 2:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள், இல்லங்களின் செயற்ப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முன்னேற்றகரமான திட்டங்கள், நிர்வாகச்செயற்பாடுகள் தொடர்பான முக்கியமான தீர்மானங்கள் என்பனவற்றினை சபை ஆராய்ந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளுடன் கூட்டம் பி.ப. 4.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.