முகாமைக்குழுக்கூட்டம் (DECEMBER-2022)

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (DECEMBER-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (07.12.2022) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து  கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப இல்லத்தின் அபிவிருத்திகள், குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்திட்டங்கள் மற்றும் கா.பொ.சா.தரத்தில் 95% வீதம் குழந்தைகள் சித்தி பெற்றுள்ளமையினை பாராட்டியும் அவசியமான தீர்மாணங்கள் சபையின் அனுமதிகளுடன் எடுக்கப்பட்டது கூட்டம் மதியம் 1மணியளவில் நிறைவு பெற்றது.
அதன் பதிவுகள் சில