மரம் நாட்டல் நிகழ்வு 07.02.2024

07.02.2024. அன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லமும் இணைந்து சிறுவர் இல்ல வளாகத்தில் பிள்ளைகளின் நலன் கருதி விளையாட்டு மைதானத்தினை சுற்றி புங்கை மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு சிறுவர் இல்ல தலைவர் திரு .ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
திரு . மரியதாசன் ஜெகூ அவர்கள் முதல் மரக்கன்றினை நாட்டி ஆரம்பித்துவைத்ததுடன் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர்
திருமதி செந்தில் குமரன் சுகந்தி மற்றும் வடமாகாண உதவி பிரதம செயலாளர் திருமதி அனற் அன்ரனிடினேஸ் , வடமாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் திரு.கோ. கிருஷ்ண குமார் . சுகாதார அமைச்சின் உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், இல்லத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள்,இல்ல சிறார்கள் ஆகியோரால் நாட்டப்பட்டது