Categories
News

பொதுக் கூட்டம்-24.06.2018

பொதுக் கூட்டம்-24.06.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் அரையாண்டு பொதுக் கூட்டம் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (24.06.2018) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

முதலில் மறைந்த தலைவர் அமரர் தி. இராசநாயகம் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர் அமரர் திரு. S. இரத்தினசிங்கம் ஆகியோருக்கான மௌன அஞ்சலி இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் தாபக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

இதில் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.