புதிர் வழங்கும் நிகழ்வு

எமது இல்லக் குழந்தைகளின் உணவுக்கென நன்கொடையாளர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நெற்காணிகளில் கடந்த வருடம் கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு 16.02.2019 இன்று  புதிய நெல்லில் சமைக்கப்பெற்ற புதிர்ப்பொங்கல் இல்லக் குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் இல்லத்தலைவர் பொன். நித்தியானந்தம் ஐயா மற்றும் இல்லத்தின் உபதலைவர் திரு. அ. கனகரத்தினம் ஐயா அவர்களையும் இல்லப் பணியாளர்களையும்  படத்தில் காணலாம்.