பிறந்த நாள் நிகழ்வு 28.04.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் பிள்ளைகளுள் பங்குனி, சித்திரை மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வானது 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை இல்லத்தலைவர் திரு.ச மோகனபவன் அவர்களின் தலைமையில் 3.30 மணியளவில் எமது இல்ல வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி தர்மராயன் வினோதன் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களும் சிறப்பு விருந்தினராக வைத்திய கலாநிதி இராசரத்தினம் கனகரத்தினம் அரச கால்நடை வைத்திய அதிகாரி கிளிநொச்சி அவர்களும் இல்லத்தின் சிரேஷ்ர உப தலைவர் திரு.அ கனகரத்தினம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர், இல்லக்குழந்தைகளும் கலந்து சிறப்பித்தனர்.
பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பரிசில்களும் வழங்கப்பட்டன இந் நிகழ்வில் விருந்தினர் கௌரவிப்பும் இல்லக்குழந்தைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது