பிறந்தநாள் விழா -MARCH-2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022 பங்குனி மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 27.02.2022 அன்று இல்ல தலைவர் திரு. ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. இ.அரியரட்ணம் அவர்கள் பிரசித்தி நொத்தாரிசு வடமாகாண யாழ்மேல் நீதி மன்ற வலயம் அகில இலங்கை சமாதான நீதவான் தலைவர் பூனகரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், திரு. சி.பத்மசிறி அவர்கள் பொருளாளர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் கிளிநொச்சி உதவி ஆணையாளர் காணி உரித்து மற்றும் தீர்வு திணைக்களம் வடமாகாணம். அவர்களும் திரு. கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர். பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.