பிறந்தநாள் விழா-April

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் அமரர் உயர் திரு. தி.இராசநாயகம் ஐயா அவர்களின் ஜெனன தினத்தையிட்டு  அவரது திருவுருவச்சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் 2022 சித்திரை மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 01.05.2022 அன்று எமது இல்லத்தலைவர் திரு. ச. மோகனபவன்  அவர்களின் தலமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.     இந்நிகழ்வில் விருந்தினர்களாக  திரு. பொன்னம்பலம்  விஜயநாதன் அவர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர் முன்பிள்ளைப்பருவ கல்வி அபிவிருத்தி கிளிநொச்சி வடக்கு வலயம் அவர்களும் திரு. கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு. S. யசோதரன் உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள்  அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.  பிரதம விருந்தினராக கலந்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.