பணியாளர் ஒன்றுகூடல் 06.01.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2023 ம் ஆண்டின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் நிகழ்வானது 06.01.2024 அன்று கிராஞ்சி இராசநாயகம் தென்னம் தோப்பில் பணியாளர் நலன்புரி சங்க தலைவர் திரு தே. சுபாகரன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தலைவர் திரு ச.மோகனபவன் அவர்கள் கலந்து கொண்டனர் அவருடன் விருந்தினராக இல்ல செயலாளர் திரு கு. பகீரதன், பொருளாளர் திரு சி.பத்மசிறி, உபதலைவர் திரு சி. யசோதரன் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் திருமதி கிருபா ஜெயக்குமார், திரு ந. ரவிபவன், கிராம அலுவலர் திரு சு.கஜன் அவர்களும் கலந்து கொண்டதுடன் கதாநாயகர்களாக இல்ல பணியாளர் அனைவரும் கலந்து கொண்டனர்

மேலும் எமது இல்ல பணியாளர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் போட்டிகளும் இடம்பெற்றன அதன் பதிவுகள் சில