நெற் புதிர் எடுக்கும் நிகழ்வு-21.01.2019

எமது இல்லக் குழந்தைகளின் உணவுக்கென நன்கொடையாளர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நெற்காணிகளில் கடந்த வருடம் கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு தைப்பூச நன்னாளாகிய இன்று 21.01.2019 அறுவடை ஆரம்ப நிகழ்வு (நெற் புதிர் எடுக்கும் நிகழ்வு) இடம்பெற்றது. இவ் ஆரம்ப நிகழ்வில் இல்லத்தலைவர் பொன். நித்தியானந்தம் ஐயா மற்றும் இல்லத்தின் கெளரவ முகாமைக்குழு உறுப்பினர் திரு. கு. கிட்ணசாமி அவர்களையும் பிரதம நிறைவேற்று அலுவலர் திரு. தே. சுபாகரன் அவர்களையும் இல்லப் பணியாளர்களையும்  படத்தில் காணலாம்.