க. பொ.த உயர்தரப் பரீட்சையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் சாதனை

 

. பொ. உயர்தரப் பரீட்சையில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் சாதனை

எமது இல்லத்தில் தங்கியிருந்து கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று 2016ம் ஆண்டு நடைபெற்ற க. பொ. த. உயர்தரப் பரீட்சையில்  கலைப் பிரிவில் மூன்று பாடங்களிலும் திறமைச் சித்தியடைந்து  (3A) மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப் பெற்று செல்வன் ஜெ. பிரபுதேவா அவர்கள் எமது இல்லத்திற்கு பெருமை சோ;த்துள்ளதுடன் தொடர்ந்தும் ஏனைய மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

மேலும் இல்ல மாணவர்களான கோ. ஜெயவிதுசன் விஞ்ஞானப்பிரிவில் B 2C பெற்று மாவட்டத்தில் 23வது நிலையையும் கலைப்பிரிவில் உ. சிந்தனைச் செல்வி -3B பெற்று மாவட்டத்தில் 76வது நிலையையும் தொழில்நுட்பப் பிரிவில் பொ. துசாந்தி -3S  பெற்று மாவட்டத்தில் 42வது நிலையையும் பெற்றுள்ளனர். அத்துடன் இ. ராம்ஜி -2B  C, நா. ரதன் B  2C,  சி. பிரசாந்தி -1B 1C 1S ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இல்லத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்;த்துள்ளனர். இவர்களது முயற்சிக்கு என்றும் தலை சாய்க்கின்றோம்.