கல்விச்சுற்றுலா 18.02.2024

வருடாந்த கல்விச்சுற்றுலா..

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இந் வருடத்தின் முதலாவது கல்விச் சுற்றுலா நேற்றைய தினம் ( 18.2.2024) இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் பிரதான தொல்லியல் பிரதேசங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களான திருக்கேதீச்சரம் ,மடு மாதா தேவாலயம் ஆகியவற்றை தரிசிப்பதாக இச்சுற்றுலா திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கமைவாக இல்லக்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இல்லத் தலைவர், பணிப்பாளர், பணியாளர்கள் மற்றும் முகாமைக் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். இச்சுற்றுலாவில் இல்லக்குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பதிவுகள் சில