கராத்தே போட்டியில் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லக் குழந்தைகள் சாதனை

 

 

இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் 14.07.2018, 15.07.2018 ஆகிய இரு தினங்கள் யாழ் மத்திய கல்லூரியில் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான வட மாகாண திறந்த கராத்தே சுற்றுப் போட்டியில் எமது இல்லக் குழந்தைகள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட 52 பதக்கங்களைப் பெற்று எமது இல்லத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களது வெற்றிக்கு தலைசாய்க்கின்றோம். வெற்றியீட்டிய இல்லக் குழந்தைகளுடன் இல்லத் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் அவர்களையும் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. வெ. வேலாயுதம் அவர்களையும் அவர்களையும் படங்களில் காணலாம்.

இவர்களது வெற்றிக்கு உறுதுணையாயிருந்த கராத்தே ஆசிரியர் திரு. சென்சேய் சி. விஜயராஜ் அவர்களையும் பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம்.