Categories
News

இல்லக் குழந்தைகளின் சித்திரை மாத பிறந்த நாள் விழா -2018

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 சித்திரை மாதம் பிறந்த நாளைக் கொண்டாடும் குழந்தைகளின் பிறந்த நாள் விழா 30.04.2018 திங்கட் கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. மு. முத்துக்குமாரன் (பொறுப்பதிகாரி, மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களம், கிளிநொச்சி) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. சி. சிவபாதசுந்தரம் (சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், கிளிநொச்சி) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.