ஆசிரியர்தின விழா- 2022

எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஆசிரியர்தினவிழா 08.10.2022 அன்று பி.ப 03 மணிக்கு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டத்தில் இல்ல தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. கந்தையா யுவராசா உதவிக்கல்வி பணிப்பாளர் , முன்பள்ளிக்கல்வி வலயக்கல்வி அலுவலகம் கிளிநொச்சி அவர்களும் , திரு. சின்னத்தம்பி இராமமூர்த்தி ஓய்வு நிலை நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கிளிநொச்சி அவர்களும் எமது இல்லத்தின் சிரேஸ்ட உபதலைவர் திரு அ.கனகரத்தினம், திரு.யசோதரன் அவர்களும் முகாமைக்குழு உறுப்பினர்களும் , எமது இல்ல ஆசிரியர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள், முகாமையாளர்கள், இல்லப்பணியாளர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்ததுடன் ஒவ்வொரு ஆசிரியர்களும் இல்லக் குழந்தைகளால் மலர்ச் செண்டு கொடுத்து மகிழ்வித்து குழந்தைகளின் பான்ட் வாத்திய இசையுடன் வரவேற்று அழைத்து வரப்பட்டதுடன் அலங்கரிக்கப்பட்ட பரமலிங்கம் மண்டபத்தில் குழந்தைகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும், நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டது.

அதன் பதிவுகள்…