அமரர் இமயம் உயர் திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் நிறுவுனரும் தந்தையும் ஆகிய அமரர் இமயம் உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 02.11.2022 அன்று மாலை 3.30 இற்கு எமது இல்லத்தில் சிரேஸ்ட உபதலைவர் திரு கனகரத்தினம் ஐயா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் எம் இல்ல முகாமைக்குழு உறுப்பினர்கள் பணிப்பாளர்கள் இல்ல பணியாளர்கள் முகாமையாளர்கள் மற்றும் இல்ல குழந்தைகள் கலந்து கொண்டு திருவுருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தினர் அத்துடன் இமயம் உயர்திரு. திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா ஆற்றிய நற்பணிகள் மற்றும் சாதனைகள் பற்றிய நினைவு உரை இல்லக்குழந்தைகள் மற்றும் ,பணியாளர்கள் முகாமைக்குழு உறுப்பினர்களால் ஆற்றப்பட்டது.

அதன்பதிவுகள் சில…