Categories
News

பிறந்தநாள் நிகழ்வு 30.06.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் பிள்ளைகளின் வைகாசி,ஆனி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வானது 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை இல்லத்தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 4.00 மணியளவில் எமது இல்ல வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது .

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.சுப்பிரமணியம் முரளிதரன் (மாவட்ட அரசாங்க அதிபர் கிளிநொச்சி) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு அந்தோனிப்பிள்ளை அன்ரன் டயஸ் (அதிபர் . கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயம்) அவர்களும் எமது இல்லத்தின் செயலாளர் திரு கு. பகீரதன், சிரேஸ்ர உபதலைவர் திரு. அ கனகரத்தினம், உபதலைவர் திரு சி. யசோதரன் , கிருபா ஜெயக்குமார் முகாமைக்குழு உறுப்பினர் அவர்களும் மற்றும் பணியாளர்கள் இல்லக்குழந்தைகளும் கலந்து சிறப்பித்தனர்

பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பரிசில்களும் வழங்கப்பட்டன அத்தோடு இல்லக்குழந்தைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது அதன் பதிவுகள் சில