பிறந்தநாள் நிகழ்வு 25.02.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வரும் பிள்ளைகளுள் தை, மாசி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வானது 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை இல்லத்தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் மாலை 5.00 மணியளவில் எமது இல்லத்தில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடா நாட்டை சேர்ந்த எமது இல்ல நான்கொடையாளர் திரு . திருமதி கந்தையா விஜயகாந்தன் விஜயலட்சுமி விஜயகாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு திருமதி ஜவீனன் ஜெயசோதிநாதன் அன் மிஷேல் ஹொல்ம்பு டென்மார்க் அவர்களும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் சிரேஸ்ர உபதலைவர் திரு அ. கனகரத்தினம் அவர்களும் முகாமைக்குழு உறுப்பினர் திரு செந்தூரன் அவர்களும் மற்றும் பழைய மாணவர்களும்,அலுவலக பணியாளர்களும்,இல்ல குழந்தைகளும் கலந்து சிறப்பித்தனர்
பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பணபரிசில்கள் வழங்கப்பட்டன அத்தோடு இல்லக்குழந்தைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது அதன் பதிவுகள் சில