கல்விக் குழுக்கூட்டம்- 30.12.2018

கல்விக் குழுக்கூட்டம்- 30.12.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (மார்கழி-2018) கல்விக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (30.12.2018) காலை 9:00  மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் எமது இல்ல கல்விக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளர் திரு. க. முருகவேல் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் இவ்வருட கல்வி வளர்ச்சி பற்றியும் கல்வி அபிவிருத்திக்கான எதிர்கால செயற்றிட்டங்கள் சம்பந்தமான விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.

 

முகாமைக் குழுக்கூட்டம்- 30.12.2018

முகாமைக் குழுக்கூட்டம்- 30.12.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (மார்கழி-2018) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (30.12.2018) காலை 10:30 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

இதில் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.

 

மரம் நாட்டு விழா

 

மரம் நாட்டு விழா

வட மாகாணக் காணித் திணைக்களத்தின் ஊடாக எமது இல்லத்திற்கு வழங்கப்பட்ட சவுக்கு மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு 02.12.2018 இன்று எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல கிராஞ்சி தென்னந் தோட்டத்தில் நடைபெற்றது. இதன் போது எமது இல்லத் தலைவர் உயர்திரு. பொன். நித்தியானந்தம் ஐயா மற்றும் முகாமைத்துவக் குழு உறுப்பினர் திரு. ஜெ. மினேஸ் அவர்கள், இல்லப் பணியாளர்கள் மற்றும் இல்லக் குழந்தைகளால் சவுக்கு மரக்கன்றுகள் நாட்டப்படுவதைப் படங்களில் காணலாம்.

முகாமைக்குழுக் கூட்டம்-25.11.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (கார்த்திகை-2018) முகாமைக்குழுக் கூட்டம் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (25.11.2018) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

இதில் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.

முகாமைக்குழுக் கூட்டம்-28.10.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (ஐப்பசி-2018) முகாமைக்குழுக் கூட்டம் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (28.10.2018) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

இதில் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.

குருகுல பிதா அப்புஜி அவர்களின் நினைவு தினம் -24.10.2018

குருகுல பிதா அப்புஜி அவர்களின் நினைவு தினம் 24.10.2018 இன்று எமது இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நினைவு கூரப்பெற்றது. இதன்போது இல்லத் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் அவர்கள் மற்றும் பணியாளர்கள், இல்லக் குழந்தைகள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரல் ஒழுங்கிற்கேற்ப இந்நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.

எமது இல்லத்தின் முன்னாள் தலைவர் அமரர் தி. இராசநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு திதி நினைவு நாள் 23.10.2018 இன்று எமது இல்லத்தில் இல்லக் குழந்தைகளால் ஆத்மசாந்திப் பிரார்த்தனையுடன் நினைவுகூரப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது இல்லக் குழந்தைகளுக்கு முழுநேரச்சிறப்புணவு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எமது இல்லத்தின் முன்னாள் தலைவர் அமரர் தி. இராசநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு திதி நினைவு நாள் 23.10.2018 இன்று எமது இல்லத்தில் இல்லக் குழந்தைகளால் ஆத்மசாந்திப் பிரார்த்தனையுடன் நினைவுகூரப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது இல்லக் குழந்தைகளுக்கு முழுநேரச்சிறப்புணவு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

43வது தேசிய ரீதியிலான கராத்தே சுற்றுப் போட்டியில் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லக் குழந்தைகள் சாதனை

இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் 13.10.2018, 14.10.2018 ஆகிய இரு தினங்கள் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட 43வது தேசிய ரீதியிலான கராத்தே சுற்றுப் போட்டியில் எமது இல்லக் குழந்தைகள் பங்கேற்றமையை பாராட்டுவதோடு இதில் செல்வன் ஜெ.கிருபாகரன் (13வயது) மற்றும் செல்வன் சு. பிறேமிலன் (13வயது) ஆகிய இருவர் குமித்தே போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்று வெற்றியீட்டி கிளிநொச்சி மாவட்டத்திற்கும் எமது இல்லத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளமையை இல்லக் குழந்தைகள், இல்ல நிர்வாகத்தினர் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம். இவர்களது வெற்றிக்கும் அயராத முயற்சிக்கும் என்றும் தலைசாய்க்கின்றோம். வெற்றியீட்டிய இல்லக் குழந்தைகளுடன் இல்லத் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் அவர்களையும் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. வெ. வேலாயுதம் அவர்களையும் அவர்களையும் படங்களில் காணலாம்.

 

இவர்களது வெற்றிக்கு உறுதுணையாயிருந்து பயிற்சி வழங்கிய கராத்தே ஆசிரியர் திரு. சென்சேய் சி. விஜயராஜ் அவர்களையும் பாராட்டி வாழ்த்தி நிற்கின்றோம்.

முகாமைக்குழுக் கூட்டம்-30.09.2018

முகாமைக்குழுக் கூட்டம்-30.09.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (புரட்டாதி-2018) முகாமைக்குழுக் கூட்டம் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (30.09.2018) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

இதில் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.

இல்லக் குழந்தைகளின் ஆவணி, புரட்டாதி மாத பிறந்த நாள் விழா

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018  ஆவணி, புரட்டாதி மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்த நாள் விழா 30.10.2018 ஞாயிற்றுக் கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. சின்னத்தம்பி இராமமூர்த்தி (நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கரைச்சி) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி இராமமூர்த்தி யசோதா (ஆசிரியர், கிளி. கிளிநொச்சி இந்துக் கல்லூரி) அவர்களும் திருமதி சாந்தினி சக்திவேல் (கனடா) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.